இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் புதுவிதமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு இருக்கும் மன அழுத்தங்கள் குறைகின்றன. விலங்குகளின் வேடிக்கை வீடியோக்களை வைத்து ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பிரபலமடைந்து வரும் பயணங்கள் ஏராளம்.அதன்படி சுமார் ஆறு வயது பள்ளி சிறுவன் ஒருவன் குட்டி முதலையை பொம்மை போல தூக்கிக் கொண்டு விளையாண்டு கொண்டிருக்கிறான்.

அந்த முதலையும் குட்டி என்பதால் சிறுவனுடன் அழகாக விளையாடுகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வெளிநாடுகளில் ஆபத்தான விலங்குகளை செல்ல பிராணிகளாக வளர்த்து வருவதால் இந்த வீடியோ அவ்வளவு ஆபத்தானதாக தெரியவில்லை. இருந்தாலும் இதனை பார்த்த இணையவாசிகள் பலர், பார்த்துடா முதுகை பியந்து தனியா எடுத்துரப் போகுது என்று கலாய்த்து வருகின்றனர்.