ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் மற்றும் தசகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் 6.7, முர்கோப்-வில் 6.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. உலக நாடுகளில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.