உலகின் பல இடங்களிலும் பல்வேறு வித்தியாசமான மரபுகள் பின்பற்ற படுகின்றன. அந்தந்த இடங்களில் புவியியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வெவ்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அதுபோன்ற வினோதமான பாரம்பரியம் ஒரு தீவில் பின்பற்றப்படுகின்றன. அங்கு ஆண்கள் மட்டுமே வாழ முடியும். பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது சுவாரசியம் என்னவென்றால் ஆண்கள் பெண்களை கடல் தெய்வமாக வணங்குகிறார்கள். ஆனால் பெண்கள் இங்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான இடம் ஜப்பானில் உள்ளது. இதனை ஒக்கினோசமா தீவு எனவும் அழைக்கப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஒக்கினோசமா தீவு யுனஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த தீவில் 700 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கொரிய தீவுக்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக மையமாக இருந்தது எனவும் கூறப்படுகிறது.

இந்த தீவில் பழங்காலத்தில் இருந்தே இன்று வரை பல கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. அது இன்றளவும் செல்லுபடியாகும் எனக் கூறுகிறார்கள். இந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாக தான் பெண்கள் இங்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தீவில் பாதிரியார்கள், ஆராய்ச்சியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பத்திரிகை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.