பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை திருப்போரூரில் இருந்து தொடங்குகிறார். இதற்காக திருப்போரூரில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களிலும் ராமதாஸின் பெயர் இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேனர்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி, ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இல்லை.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை முன்னிட்டு பேனர்கள் பாமக கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கட்சியின் கொடியை பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் நடைபயணத்தை முன்னிட்டு கட்சி கொடிகள் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
