தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனத் தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்கிறது.

இந்தச் சூழலில், மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கியுள்ள ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ கட்சி, வரவிருக்கும் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் நடைபெற்ற அக்கட்சியின் தொடக்க விழாவில் பேசிய பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார், 1972-ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தைப் போல, 2026-ல் விஜய் அண்ணா நிச்சயம் ஆட்சிக்கு வருவார் என உறுதிபடத் தெரிவித்தார்.

விஜய்யின் “ஊழல் இல்லாத ஆட்சி” என்ற முழக்கத்திற்காகவே தாங்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும், தமிழகத்தில் ஊழலை ஒழிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் உருக்கமாகப் பேசினார்.

பல கட்சிகளில் இருப்பவர்களும் ஊழலற்ற ஆட்சிக்காக விஜய்யை ஆதரிக்க வேண்டும் என்பதே இவர்களின் தற்போதைய அழைப்பாக உள்ளது.