தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது திமுக மூத்த தலைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“தமிழ்நாடு தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது” என்ற மனநிலையில் விஜய் இருப்பதாகக் கூறிய அவர், கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்தபோது விஜய்யின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
அந்தச் சமயத்தில் தமிழர்களுக்கு உதவத் திரையுலகினர் நிதி திரட்டியபோது, சாதாரணப் பணியாளர்கள் கூட 5,000 ரூபாய் வரை கொடுத்த நிலையில், விஜய் வெறும் 500 ரூபாய் மட்டுமே வழங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“விஜய் தந்தது வெறும் ரூ.500’’
“நான் தான் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் நான் என சொல்கிறார். தன்னை சுற்றி தான் தமிழ்நாடு இயங்குகிறது என்ற மனநிலையில் விஜய் இருக்கிறார். 2009ல் இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது, நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து நிதி திரட்டினார்கள். சாதாரண திரைத்துறையினர்… pic.twitter.com/2uF6RkwEcD
— Thanthi TV (@ThanthiTV) February 23, 2026
“>
விஜய்யின் இந்தச் செயல் அவரது இனப்பற்றைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும், இத்தகைய பின்னணியைக் கொண்ட விஜய்க்குத் தமிழ்நாடு ஆதரவாக நிற்குமா என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
