2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடுகள் அகற்றப்படாவிட்டால் அந்த அணி மீள்வது கடினம் என முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுப் கடுமையாகச் சாடியுள்ளார்.
தகுதியற்ற நபர்கள் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்றும், இது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் இருண்ட காலம் என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, விளையாட்டை விட அரசியலுக்கே முக்கியத்துவம் அளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆசியக் கோப்பை விவகாரம் மற்றும் வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியப் போட்டியைப் புறக்கணிப்பதாகக் கூறி அரங்கேறிய நாடகங்கள் போன்றவை அணியின் கவனத்தைச் சிதறடித்ததாகக் கருதப்படுகிறது.
Unless we remove political influence and personal agendas from Pakistan cricket, we cannot return to the team we once were. This is the darkest period in our cricketing history, and my heart bleeds for it. Incompetent individuals must be removed from office and from the team.
— Mohammad Yousaf (@yousaf1788) February 16, 2026
“>
இத்தகைய தேவையற்ற அரசியல் அழுத்தங்களே இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி அவமானகரமான தோல்வியைச் சந்திக்க முக்கியக் காரணம் என அந்நாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.
