மைதானத்தில் தனது அதிரடி பேட்டிங்கால் ஜாம்பவான் பவுலர்களையே மிரள வைக்கும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு கியூட் வீடியோ மூலம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், வைபவ் பேட்டை கீழே வைத்துவிட்டு சமையலறையில் ‘மாஸ்டர் செப்’ ஆக அவதாரம் எடுத்துள்ளார். கிச்சனில் உதவி செய்ய வந்த அவரிடம் என்ன தெரியும் என்று கேட்டதற்கு, “எனக்கு ரோட்டி சுட மட்டும்தான் தெரியும்” என்று வெகுளியாகக் கூறி வேலையில் இறங்குகிறார்.
చెఫ్ గా మారిన వైవభ సూర్యవంశీ
ఎక్స్ లో వీడియో పోస్ట్ చేసిన రాజస్థాన్ రాయల్స్
Rajasthan Royals posted a video on X showing Vaibhav Suryavanshi turning into a chef.
VC: @rajasthanroyals pic.twitter.com/DMCuAzjCgE
— BIG TV Breaking News (@bigtvtelugu) May 12, 2026
மாவு உருண்டையில் இரண்டு காதுகளை வைத்து ‘பாண்டா’ வடிவில் ரோட்டி செய்து அசத்திய வைபவ், அடுத்து கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு செம்ம ஸ்டைலாக ரோட்டியை சுட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் தான் செய்த ரோட்டி தனது அம்மாவை விட வட்டமாக இருப்பதாக அவர் குதூகலித்த தருணம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. மைதானத்தில் ஆக்ரோஷமான வீரராக அறியப்படும் வைபவ், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு ஜாலியான மனிதரா என ரசிகர்கள் இந்த வீடியோவை வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.
