திருமணத்திற்காக நகை வாங்குவதை ஒரு வருடத்திற்குத் தவிர்த்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். இந்த ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாதப் பொருளாகவும், அதைவிடப் பெரிய காமெடி கலாட்டாவாகவும் மாறியுள்ளது. இன்ஸ்டாகிராம் முதல் யூடியூப் வரை எங்கு பார்த்தாலும் கணவன் – மனைவி நகைக்கடைக்குச் செல்லும் காமெடி வீடியோக்கள், ரீல்ஸ்கள் என இணையமே குலுங்கிச் சிரிக்கிறது.

மோடியின் பேச்சை டிவி-யில் பார்த்த கணவன்மார்கள், தங்களுக்கு நகை வாங்கும் செலவில் இருந்து ‘சுதந்திரம்’ கிடைத்துவிட்டது போலக் கொண்டாடும் வீடியோக்கள் பல மில்லியன் வியூஸ்களைக் கடந்து வருகின்றன. ​சமூக வலைதளங்களில் இந்தப் பேச்சு வேடிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், இதன் பின்னால் ஒரு வலுவான பொருளாதாரக் காரணம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் நம் நாட்டுப் பணம் அதிக அளவில் வெளியே செல்வதைத் தடுக்கவே பிரதமர் இத்தகைய ஆலோசனையை வழங்கியுள்ளார். ஆனால், இணையவாசிகள் இதைப் பற்றி கவலைப்படாமல், மனைவிகள் தங்கம் கேட்கும் போதெல்லாம் மோடியின் பேச்சை ஓடவிட்டு தப்பிக்கும் கணவர்களின் குறும்பான வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.