அமேசான் மழைக்காடுகளின் சதுப்புநிலப் பகுதிகளில் இரவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, டார்ச் லைட் வெளிச்சத்தில் மரக்கிளைகளில் நூற்றுக்கணக்கான பாம்புகள் தஞ்சமடைந்திருப்பதைப் போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ‘extinct_depths’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தத்ரூபமான வீடியோ, அதனுடன் இணைக்கப்பட்ட மர்மமான பின்னணி இசையோடு சேர்ந்து பார்ப்போரை மிரள வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இருப்பினும், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் காட்சிகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதும், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது . இயற்கையான நிகழ்வு போன்று மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஆரம்பத்தில் இதைப் பார்த்த பலரும் இது நிஜமான இயற்கைச் சூழல் என்று நம்பித் தீவிரமாகப் பகிர்ந்து வந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by EXTINCT DEPTHS (@extinct_depths)

இது போன்ற வீடியோக்களின் கமெண்ட் பகுதியில் பலரும் இரவு நேரத்தில் இத்தனை ஆபத்தான பாம்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதற்கே தங்களுக்கு நடுக்கம் ஏற்படுவதாகத் தங்களது அச்சத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.  அதேவேளையில், நவீன தொழில்நுட்பங்களை நன்கு அறிந்த விழிப்புணர்வுள்ள பயனர்கள் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மாயக் காட்சி என்பதைச் சுட்டிக்காட்டி மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.