பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள ‘கயல்’ சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை சைத்ரா ரெட்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரத்தால் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை உலகில் தவிர்க்க முடியாத முகமாக வலம் வரும் இவரின் சமீபத்திய சோஷியல் மீடியா நடவடிக்கைகள் சினிமா வட்டாரத்தில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலா என்பவரைத் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சைத்ரா ரெட்டி, தன் கணவருடன் எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியான புகைப்படங்களை வழக்கமாக இணையத்தில் பகிர்ந்து வந்தார். ஆனால், தற்போது திடீரென அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மாயமாகியுள்ளதைக் கண்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருமண நாளைக் கூட உற்சாகமாகக் கொண்டாடி வந்த அவர், இப்போது அதுகுறித்த எந்தவொரு பதிவையும் வெளியிடாமல் அமைதியாக இருப்பதும், பழைய பதிவுகளை நீக்கியிருப்பதும் பலவிதமான யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது கணவரைப் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் பரவி வந்தாலும், இதுகுறித்து நடிகை தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
