
திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து இளம்பெண் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலிக்கு மருந்து அதிகம் உட்கொண்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.