டெல்லி ஐஐடியில் பேஷன் ஷோவில் பங்கேற்க வந்த மாணவிகளின் குளியலறை காட்சியை படம்பிடித்த துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். ஐஐடியில் 20 வயது ஒப்பந்த ஊழியரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் பாரதி கல்லூரி மாணவிகள் 10 பேர் குளியலறை காட்சி படமாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தனர். ​​

குளியலறையில் உடை மாற்றும் போது, ​​அந்த காட்சியை மர்மநபர் மொபைல் போனில் பதிவு செய்ததை மாணவி ஒருவர் கவனித்து கூச்சலிட்டதை தொடர்ந்து, குற்றவாளி அங்கிருந்து தப்பியோடினார். சுமார் பத்து நிமிடங்கள் குளியலறை காட்சியை படம்பிடித்ததும் தெரியவந்துள்ளது.