பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் களத்தில் தனித்து போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதா ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது டென்ஷன் ஆன தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை, அதை எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்?  பிரஸ் கிட்ட ஏன் சொல்லணும் ? தமிழக மக்களிடம் எப்போது சொல்லனுமோ, அப்போ சொல்றோம். உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கட்சி எப்படி தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் ? எந்த பாதையிலே செல்ல வேண்டும் ? 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் கிடையாது. இது கட்சியினுடைய தலைவர்களிடம் உள் அரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி 1998ல் ஆரம்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக  NDA இருக்கு. NDAவின்   தன்மை என்பது வேறு வேறு காலகட்டத்தில் மாறி இருக்கு. நிறைய கட்சிகள் வந்திருக்கிறார்கள், நிறைய கட்சிகள் போயிருக்கிறார்கள். நிறைய கட்சிகள் பரிணாமத்தோடு மறுபடியும் வந்திருக்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி 2024 தமிழகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மிகப்பெரிய அளவுல இங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்கும். மத்தபடி கூட்டத்தில் என்ன பேசுனோம் ? தலைவர்கள் என்ன பேசுனாங்க ? அது பத்திரிகையில் விவாதிக்க வேண்டிய விஷயம்  அல்ல. அதை நீங்களும் புரிஞ்சிப்பீங்க.  ஒரு பத்திரிகையாளராக இருக்கிற உங்களுக்கு தெரியும்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை NDAவை பிரதானப்படுத்தி போறோம்.  தேசிய ஜனநாயக கூட்டணி போவோம். 2024 பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியோடு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இங்கே முன்னெடுக்கும்.  அதற்கான அறிகுறிகள் 2024 தேர்தலுக்கு முன்பே தெரியும். 2024 வரக்கூடிய வெற்றி பெற்ற வேட்பாளர்களை பார்ப்பீங்க, வாக்கு சதவீதத்தை பார்ப்பீர்கள், அதில் வேறு எந்த மாற்று கருத்தும் இல்லை என தெரிவித்தார்.