தேசியக் கல்விக் கொள்கைக்கு  மாற்றாக, தமிழகத்திற்கெனப் பிரத்யேகமான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2026-2027 கல்வியாண்டு முதல், மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் படிப்படியாக மாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.