சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (நவ. 25) விலை திடீரென அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ₹.200 உயர்ந்து ₹.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வால், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ₹.1,600 அதிகரித்து ₹.93,760-க்கு விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை ஏற்றம் காரணமாகத் தங்கம் வாங்க நினைத்த வாடிக்கையாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளிக்கு ₹.3 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ₹.174-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹.1,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டுக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
