பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி, அதிலிருந்து விலகுவதாகத் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த அவர், திமுக கூட்டணிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடுவோம் என உறுதியளித்த செல்வகுமார், கூடவே ஒரு முக்கியக் கோரிக்கையையும் வைத்துள்ளார். ‘வலையர் புனரமைப்பு வாரியம்’ என்பதைத் திருத்தி, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வுத் திட்டம்’ என அறிவிக்க வேண்டும் என்று அவர் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.