சமூக வலைதளங்களில் ஒரு டெலிவரி ஊழியரின் சமயோசித புத்தியையும் மனிதாபிமானத்தையும் போற்றும் விதமான காணொளி ஒன்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த ஊழியருக்கு இரவு நேரத்தில் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து மூன்று எலி மருந்து பாக்கெட்டுகள் ஆர்டர் வந்துள்ளது. பொருட்கள் வழங்கச் சென்றபோது, அந்த வாடிக்கையாளர் அழுதுகொண்டே பேசியது அந்த ஊழியருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபரீதம் ஏதோ நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அவர், வாடிக்கையாளரின் இடத்திற்குச் சென்றதும் பார்சல் தொலைந்துவிட்டதாகக் கூறி தந்திரமாகத் தவிர்த்தார். பின்னர், “எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது” என்று அந்த நபருக்குப் பக்குவமாக அறிவுரை கூறியுள்ளார். வாடிக்கையாளர் முதலில் மறுத்தாலும், “இரவு நேரத்தில் எலி மருந்து வாங்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை, எனக்கு எல்லாம் புரியும்” என்று கூறி அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
Dear @albinder please reward your delivery partner . He is a real hero . Honestly he saved a life . ❤️❤️❤️ pic.twitter.com/bGTyzrcRuG
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) January 8, 2026
இந்தச் செயலின் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்றிய திருப்தியில், “இவ்வளவு நாள் வேலை செய்ததில், இன்றுதான் ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்த உணர்வு எனக்குள் இருக்கிறது” என்று அந்த ஊழியர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கடமையை மட்டும் செய்யாமல், ஒரு சக மனிதனின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலாகச் செயல்பட்ட அந்த டெலிவரி ஊழியரை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
