ஓமன் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 அன்று பார்கா பகுதியில் இரண்டு இந்தியர்கள் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்தது.

வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடத் தயங்கிய நிலையில், 25 வயதான ஷேஷாத் கான் என்ற பாகிஸ்தான் இளைஞர் துணிச்சலாக வெள்ள நீரில் குதித்து, மூழ்கிக் கொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த இரண்டு இந்தியர்களையும் பத்திரமாக மீட்டுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஷேஷாத் கானுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
<a href=”http://

“>

இது குறித்துப் பேசிய அவர், “அந்த இக்கட்டான நேரத்தில் நான் அவர்களின் மதம் அல்லது நாட்டைப் பார்க்கவில்லை; ஒரு மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாக இருந்தது” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். எல்லைகளைக் கடந்த இந்த மனிதநேயச் செயல் உலகம் முழுவதும் பலரது மனங்களை நெகிழச் செய்துள்ளது.