தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய முதலமைச்சர் விஜய்யும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்துக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது நெகிழ்ச்சியான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில், “முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது ஒரு முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை” என்றும், “கண்ணியத்தை உள்ளடக்கிய இத்தகைய அரசியலையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றும் அவர் மனதாரப் பாராட்டியுள்ளார்.

தேர்தல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், மக்கள் தீர்ப்பை மதித்து ஒருவரை ஒருவர் மரியாதையுடன் சந்திப்பது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பாராட்டு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.