தமிழக முதல்வர் விஜய் இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை கட்டி அணைத்து வீட்டுக்குள் வரவேற்று அழைத்து சென்றார். அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஸ்டாலினோ விஜய் ஆரத்தழுவி கையில் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்து சென்றார். இதே போன்ற திமுக கூட்டணி கட்சி தலைவர் ஆன மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கும் நேரில் சென்று முதலமைச்சர் விஜய் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னை வந்து சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் அவருக்கு என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினேன் என்று பதிவிட்டார். இதனை தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில். முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் விஜய் அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்.
முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.
மேனாள் முதல்வர் @mkstalin மற்றும் மேனாள் துணை முதல்வர் @Udhaystalin உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் @actorvijay அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற… pic.twitter.com/2k7dCBH32Q
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 11, 2026
