தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்திலுள்ள ஏரிகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் பெரிதளவில் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர்வரத்து அதிகமானதால், அவசர நடவடிக்கையாக இன்று (அக்.22) 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த அணை திறப்பு நடவடிக்கையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முன் தகவல் அளிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “நான் மக்களின் பிரதிநிதி. அணை திறப்பதைப் பற்றி என்னிடம் ஏன் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை? அதிகாரிகள் தாங்களாகவே திறந்து விடுகிறீர்களா? அப்படியென்றால் இதன் அர்த்தம் என்ன?” என்று அதிகாரிகளை நேரடியாகக் கடிந்துகொண்டார். இது தொடர்பான அவரது செயல்பாடு அந்த பகுதியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.
“என்கிட்ட சொல்லாமல் ஏரியை திறப்பீர்களா?” – செல்வப்பெருந்தகை காட்டம் #Chennai #Chembarambakkam #Water #Selvaperunthagai #TamilNews #Newstamil #NewsTamil24x7 pic.twitter.com/0Hn3uuRYHB
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) October 22, 2025
“>
