தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே மாற்றுத்திறனாளி கடன் மற்றும் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அடுத்த அதிரடி வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். சிறுபான்மையின மகளிர் சுயதொழில் தொடங்குவதற்காகக் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

திமுக-வின் மகளிர் உரிமைத் தொகைக்கு போட்டியாக, அதிமுக-வின் இந்தத் தள்ளுபடி அறிவிப்பு சிறுபான்மையின மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன்கள் தள்ளுபடி மட்டுமன்றி, பெண்களைக் கவரும் வகையில் மற்றொரு மெகா அறிவிப்பையும் இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்குத் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு இலவசமாக ‘பட்டுச்சேலை’ வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.