தமிழக முதலமைச்சர் விஜய் இன்று 300 புதிய அரசு பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக இயக்கப்பட இருக்கும் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் விஜய் பேருந்தில் ஏறினார்.

 

அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கைகுலுக்கி விஜய் வாழ்த்து தெரிவித்த நிலையில் பேருந்தை ஆய்வு செய்தபடியே பின்னர் பெரம்பூர் செல்லும் பேருந்தில் ஏறிய அவர் தன்னுடைய செல்போனில் அதனை வீடியோ எடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.