தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், அதே வேகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை முழுமையாக மூடுவதற்கான உத்தரவிலும் முதல்வர் கையெழுத்திட்டிருந்தால் அது மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதே முதலமைச்சர் விஜய்யின் அடுத்த அதிரடி உத்தரவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அரசு காட்டும் ஆர்வம், மதுவிலக்கிலும் தொடர வேண்டும் என்ற கிருஷ்ணசாமியின் இந்த கருத்து அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
