தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகம் 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளதாக விஜய் குற்றம்சாட்டிய நிலையில், ‘நிதி இல்லை’ என்பது போன்ற காரணங்களைத் தேடாமல், ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், கடந்த காலங்களில் நிலவிய கடும் நிதி நெருக்கடிகளையும் முந்தைய அரசு திறம்பட கையாண்டு, மாநில பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிப் பாதைக்கு மு.க. ஸ்டாலின் கொண்டு சென்றதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் கடன் சுமை மற்றும் நிர்வாகத் திறன் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே எழுந்துள்ள இந்த வார்த்தை போர் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
