தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்; இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வைத்திருக்கும் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றப் பொறுப்பேற்கும் புதிய அரசாங்கத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் வழங்கியுள்ள இந்த வாழ்த்துச் செய்தி தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.
