நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அத்துமீறி நுழைந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபரீத சம்பவத்தில் தொடர்புடைய அந்தச் சிறுவன் மட்டுமன்றி, அவனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் மேலும் மூவர் என மொத்தம் நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதில் சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.