பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் https://www.tneaonline.orghttps://www.tndte.gov.in ஆகிய இரண்டு இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம்.

இதில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 7ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்னதாக நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.