சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றவுடன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம் ஆண்டு மாணவி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.