பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14(இன்று) இருக்க வாய்ப்புள்ளது. இன்று மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர் கூறிய தினம் நெருங்கிவிட்டதால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல கட்சிகளும் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தது போல் இன்று  திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவாரா என கேள்வி எழுந்த நிலையில், இன்று  காலை 10:15க்கு DMK Files வெளியாகும் என அவர் ட்வீட் செய்துள்ளார். இதனுடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. எனவே ஊழல் பட்டியல் இவர்கள் தொடர்புடையதாக இருக்குமா என கேள்வி எழத் தொடங்கியுள்ளது.