முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக ஆதரவில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் குறித்த அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன. அதாவது ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றிக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லையாம். தேர்தல் சமயத்தில் வெளியூர் ஆட்கள் எல்லாம் தொகுதியை விட்டு சென்ற பின்னர் 1940 வாக்கு சாவடிகளுக்கு பூத் ஏஜென்ட்டாக நிற்கவைக்க கூட ஆளில்லாத நிலை உள்ளது. இதனால் ஓபிஎஸ் இன் வெற்றி தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.