கூகுள் மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்ட 80 ஆயிரத்து 667 விளம்பரங்களுக்கு பாஜக 39.41 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கட்சி அளித்த விளம்பரங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் உத்தர பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா இரண்டு கோடிக்கும் மேல் செலவிட்டு உள்ளதாகவும் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 3.38 கோடி செலவிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனைப் போலவே கூகுள் மூலம் ஆன்லைனில் அழைக்கப்பட்ட விளம்பரங்களுக்கு காங்கிரஸ் கட்சி 8.12 கோடி செலவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 736 ஆன்லைன் விளம்பரங்களுக்கு காங்கிரஸ் 8 புள்ளி 12 கோடி செலவிட்டு உள்ளதாகவும் மகாராஷ்டிராவில் மட்டும் 2.32 கோடி செலவிட்டுள்ளதாகவும் கூகுள் புள்ளியியல் மையத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.