பிரிட்டிஷ் உயிரியலாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜெரமி வேட், கங்கை நதியின் தூய்மையை ஆய்வு செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஒரு சிறிய சோதனைக் கருவி மூலம் கங்கை நீரைப் பரிசோதித்த அவர், அந்த நீர் ஒருவித பழுப்பு நிறமாக மாறுவதைக் காட்டி, அதில் மனிதக் கழிவுகள் மற்றும் பாக்டீரியாக்கள்  அதிகளவில் கலந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

புனித நதியாகக் கருதப்படும் கங்கையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டுவது பலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்ட அவர், நதியில் குளிப்பது புத்துணர்ச்சியாக இருந்தாலும், அதன் அடியில் படிந்துள்ள கழிவுகள் அச்சத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “மத நம்பிக்கைகள் கங்கையை மெல்ல மெல்லக் கொன்று வருகின்றன” என்றும், “கங்கையைத் தூய்மைப்படுத்த ஒதுக்கப்பட்ட வரிப்பணம் என்னவானது?” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by River Monsters (@rivermonsters_official)

“>

அறிவியல் உண்மைகளை விட மத நம்பிக்கைகளுக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பது கவலைக்குரியது எனப் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ நதி மாசுபடுதல் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.