டெல்லியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு குடிபெயர்ந்த இளம்பெண் மற்றும் அவரது தோழிக்கு முதல் நாளே ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் தனது ‘sa_rita_26’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவின்படி, அவர்கள் வீட்டின் பால்கனியில் நின்றிருந்த போது, அருகில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி (PG) அருகே ஒரு நபர் மர்மமான முறையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது விடுதியிலிருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்த உடனே, அந்த நபர் தனது ஆடைகளைக் குறைத்து பகிரங்கமாக சுயஇன்பத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்கள் உடனடியாக டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
https://www.instagram.com/reel/DZN-wlAzapv/?igsh=MXV6Y2hyYWJ3dWh5dw==
அடுத்த நாளும் அதே நபர் அதே இடத்திற்கு வந்து மீண்டும் அதேபோன்ற அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளார். இம்முறை சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண்கள், உடனடியாக போலீசாரை உஷார்படுத்தி, அவர்களுடன் இணைந்து சாதுர்யமாக செயல்பட்டு அந்த காமுகனை போலீசில் சிக்க வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று வைரலாகி வரும் நிலையில், “இனி டெல்லி போலீசார் பால்கனிக்கே போகாதீர்கள் என்று அறிவுரை கூறுவார்கள்” என நெட்டிசன்கள் காவல்துறையைக் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், டெல்லியின் முகர்ஜி நகர், கம்லா நகர் போன்ற பகுதிகளிலும் தங்களுக்கு இது போன்ற கசப்பான அனுபவங்கள் நேர்ந்துள்ளதாகப் பல இளம்பெண்கள் தங்களின் குமுறல்களை கமெண்ட்டுகளில் பகிர்ந்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DZSel7cvOwW/?igsh=MXNiNXEwMDQwZ3NtMw==
