தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.
தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய உள்ள அவர், இதற்கான அதிரடித் திட்டங்களைத் தீட்டியுள்ளார்.
அதே நேரத்தில், புதுச்சேரியில் விஜய்யின் தவெக கட்சியுடன் ‘நேயம் மக்கள் கழகம்’ அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி அமைத்துள்ளது. விஜய்யின் இந்த வருகை புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
