Paytm நிறுவனமானது சமீபத்தில் ரிசர்வ் வங்கி விதித்த தடைக்கு பின்னர் பல மாற்றங்கள் நடந்து வருகிறது . இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் யுபிஐ ஐடியை விரைவில் மாற்ற வேண்டும். அதற்கு பேடிஎம் செயலியை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கான தற்போதைய யூபிஐ ஐ டி 98xxxxxxxxx@Paytm என்ற வடிவில் உள்ளது. விரைவில் பேடிஎம் நிறுவனம் புதிய யுபிஐஐடியை  பயனர்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு புதிய யுபிஐ ஐடியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.