தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் போதை பொருள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசாரும், அரசாங்கத்தினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

கஞ்சா, கொக்கேன் போன்றவை மட்டுமல்லாமல் வாயில் போட்டு மெல்லக்கூடிய வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்தினால் கூட அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கூறுயதாவது,  வாயில் போட்டு மெல்லும் வகையான புகையிலை பொருட்களை உபயோகிப்பதால் மக்கள் சுகாதாரமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் எச்சில் துப்புவது போன்ற செயல்கள் அறுவருப்பை உண்டாக்குகிறது. எனவே தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. டிடெக்டர்கள் மூலம் புகையிலை பொருட்களை உபயோகிப்பதை கண்டறிய முடியவில்லை.

எனவே  உடல் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். எனவே கோயம்பேட்டில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலைய கண்காணிப்பு அறையில் தீவிர சோதனைகள்‌ மேற்கொள்ளப்படும். அப்போது எவரேனும் புகையிலை பொருட்களை கொண்டு செல்வது தெரிந்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.