நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன், முத்துகிருஷ்ணன், ராஜு ஆகியோருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. நேற்று அந்த கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதை பார்த்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் மிகுந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிறந்து மூன்று நாட்களை ஆன குழந்தையை கிணற்றில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.