இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்ற நிலையில் பயணிகளும் பல்லாயிரக்கக்காணோர் வந்து செல்கின்றார்கள். இந்த பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன காப்பகங்கள் மூன்று இருக்கின்றது. ஆனால் பேருந்து நிலைய வளாகத்திலேயே ஆங்காங்கே இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றது.

பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள், வெளி ஊருக்கு செல்லும் அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றது. இதன் காரணமாக பேருந்துகளை நடைமேடையில் நிறுத்த முடியாமல் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் டிக்கெட் முன்பதிவு மையம் அருகிலேயே மினி வாகன காப்பகம் நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி நேற்று பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. மேலும் இருசக்கர வாகன நிறுத்தங்களில் பாதுகாப்பு குறைவு காரணமாக பெட்ரோல் திருட்டு, பக்கவாட்டு கண்ணாடி திருட்டு போன்ற திருட்டுகள் நடக்கின்றது. இதனால் சிலர் அங்கே வாகனங்களில் நிறுத்துவதை தவிர்க்கின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கின்றது.