மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இரவுப் பணிக்குச் சென்ற கணவன், தனது மனைவி வேறொரு நபருடன் ரோட்டோரக் கடையில் மோமோஸ் சாப்பிட்டதைக் கண்டு ஆத்திரமடைந்து நடுரோட்டில் சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சண்டையின் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.
போபாலின் அசோக் கார்டன் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கணவன் இரவு நேரப் பணிக்குச் சென்றுவிட்டதாக நினைத்து, அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் மோமோஸ் சாப்பிடச் சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவனும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்ததால் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் வெடித்தது.
ஆத்திரமடைந்த கணவன், நடுரோட்டிலேயே தனது மனைவியையும் அவருடன் வந்த ஆண் நண்பரையும் தாக்கி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடி, சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் இந்த முழுச் சம்பவத்தையும் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பயனர்கள் பலரும் இது குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான உண்மைகள் அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று கூறப்படுகிறது.
The husband left for his night shift at the factory, while his wife headed out to eat momos with her boyfriend.
coincidentally, the husband also arrived at the same spot with a friend, and the wife was caught red-handed.
Now, the husband is beating his wife, and his friend is… pic.twitter.com/nXSO6gRSCx
— Trump Asia (@sonuforx) August 14, 2026
“>
கணவன் இரவுப் பணிக்குச் சென்ற நிலையில், மனைவி தனது ஆண் நண்பருடன் மோமோஸ் சாப்பிட வந்து கணவனிடம் சிக்கிய இந்தச் சம்பவம் போபாலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
