ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் நடித்து நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இதனிடையே சர்ச்சைகளை வாரி குவித்திருக்கும் “ஆதிபுருஷ்” படத்திற்கு நேபாளம் நாட்டின் பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமர், சீதைக்கு நீண்டகாலமாக உரிமை கொண்டாடி வரும் அந்நாட்டில், சீதை இந்தியாவின் மகள் என்ற படத்தின் வசனத்தால் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வசனத்தை அகற்ற பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்ட பிறகே, அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் சட்ட ஒழுங்கு காரணமாக திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.