ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் நடித்து நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு விமர்சனங்கள் ஒரு பக்கம் இருப்பினும், முதல் நாள் மட்டும் ரூ.140 கோடி வரையிலும் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் 2 தினங்கள் முடிவில் ஆதிபுருஷ் படமானது ரூ.200 கோடி வரையிலும் வசூல் செய்து உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது 2-ஆம் நாளில் வெறும் ரூ. 60 கோடி மட்டுமே இப்படம் வசூல் செய்துள்ளது என தெரிகிறது. 2-ஆம் நாளில் வசூல் குறைந்தாலும், இரண்டே நாளில் ரூ.200 கோடி வசூல் என்பது பாக்ஸ் ஆபிஸில் சாதனையாக பார்க்கப்படுகிறது.