பிரபல திரைப்பட போஸ்டர் வடிவமைப்பாளர் ஷேக் தாவூத் (73) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சில காலமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இயக்குனர் சங்கரின் ஜீன் சொல்லிட்ட பல திரைப்படங்களுக்கு போஸ்டர் வடிவமைப்பாளராக இருந்து பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்