பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் ‘முத்து’ திரைப்படமும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படமும் டிச.8ம் தேதியன்று ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப 4K தொழில்நுட்பத்தில் வெளியானது. முத்து படத்தை கே.எஸ் ரவிக்குமார், ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தனர்.

இந்நிலையில் முத்து-வை விட ஆளவந்தான் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்து திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.7 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும், ஆளவந்தான் ரூ.15 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.