சீரியல் நடிகை சங்கீதாவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்தார். கோலமாவு கோகிலா, எல் கே ஜி, டாக்டர், பீஸ்ட், ஜெய்லர், மார்க் ஆண்டனி மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

இவர் பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து இன்று திருமணம் செய்து கொண்டார். நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜ் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.