தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சமீபத்தில் இவருடைய 75வது திரைப்படமான அன்னபூரணி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்ட நிலையில் அதில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது தயவு செய்து இனி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீங்க, அப்படி சொன்னா திட்டுறாங்க. அன்னபூரணி படத்தில் எல்லா விஷயத்தையும் நான் சரி பார்த்தேன். ஆனால் அந்த லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டது என்கிட்ட சொல்லாமலேயே செஞ்சிருக்காங்க என்று நயன்தாரா கூறியுள்ளார்.