பொதிகையில் தன் சினிமா பயணத்தை துவங்கி பின் சன் டிவிக்கு வந்தவர் தான் பெப்சி உமா. இவர் உங்கள் சாய்ஸ் எனும் நிகழ்ச்சியின் வாயிலாக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான பெப்சி உமாவை நாயகியாக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்திருக்கின்றனர். ரஜினி கூட தன் படம் ஒன்றில் நாயகியாக நடிக்க பெப்சி உமாவை கேட்டிருக்கிறார்.

எனினும் அவர் சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என அந்த நிகழ்ச்சியோடு காணாமல் போனார். விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வரப் போவதாக கூறுகின்றனர். இதில் கண்ணன்-ஐஸ்வர்யா வைத்திருக்கும் யூடியூப் சேனலுக்கான ஒரு காட்சிக்காக பெப்சி உமா சீரியலில் நடிக்கப் போகிறார் என்று கூறுகின்றனர். எனினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.