ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சியன்னா வெயிர் (23). இவர் 2022-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொண்டு இறுதிப் போட்டிக்கு தேர்வானார். இவருக்கு குதிரை போட்டியின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்துள்ளது. 3 வயதில் இருந்தே அடிக்கடி குதிரை சவாரியில் ஈடுபடும் சியன்னா வெயிர் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள வின்ட்சார் போலோ கிரவுண்டில் குதிரை சவாரி மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென குதிரை சரிந்து விழுந்ததால் சியன்னா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பல வாரங்களாக உயிர் காக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் குடும்பத்தினர் உயிர் காக்கும் கருவியை எடுத்து விடுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து சியன்னா வெயிர் உயிரிழந்தார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.