மும்பையின் புகழ்பெற்ற கே.இ.எம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி குறித்து, செஜல் பவார் என்பவர் மிகவும் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பிரீ பிரஸ் ஜர்னல்’ ஊடகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், கே.இ.எம் மருத்துவமனையை “அசிங்கமானது, நச்சுத்தன்மை வாய்ந்தது (Toxic) மற்றும் தரம் தாழ்ந்தது  என செஜல் பவார் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அந்த மருத்துவமனை வெறும் “உடல்களை வெட்டிப் பார்ப்பதற்கு மட்டுமே பெயர் பெற்றது” என்றும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 

தனது கல்லூரி அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசும் இந்த வீடியோவில், அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவர்களைப் பற்றியும் மிகவும் மோசமான முறையில் அவர் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே பல்வேறு விவாதங்களை கிளப்பியிருந்த செஜல் பவாரின் இந்த பழைய வீடியோ, தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, மருத்துவ வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.